Monday, March 2, 2015

போவோமா ஊர்கோலம்..... (டிராக்டரில்)



(இது தான் அந்த டிராக்டர்)


என்னடா டிராக்டர்லையா ஒரு மாசமா ஊரை சுத்திக்கிட்டு இருந்திருக்கான்னு, யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த டிராக்டர் ஊர்வலத்தைப் பத்தி பின்னாடி சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு மாசமா நான் வலைப்பூ பக்கத்துக்கு வராம இருந்ததுனால, எங்களின் குடும்ப நலத்தை மிகுந்த அக்கறையோடு விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த 2015 ஆம் ஆண்டு உங்களுக்கு ரொம்ப நல்ல ஆண்டு, போதாக்குறைக்கு ஏழரை வருடங்களாக உங்கள் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்த சனீஸ்வர பகவான் வேற உங்களை விட்டு போயிட்டாருன்னு சொன்னாங்களா, சரி நமக்கு ரொம்ப  நல்ல
வருஷம் தான்ன்னு நினைச்சு ஒரு மாசம் கூட முடியல, அதுக்குள்ள என் அலுவலகத்துல வேலை பார்த்த மற்றொரு நண்பர் வேறு வேலையை தேடிக்கொண்டு போயிட்டதுனால, அவர் பார்த்துக்கிட்டு இருந்த ஒரு கடியான ப்ராஜெக்ட்டை நான் பார்க்க வேண்டியதாகி விட்டது. என்னை விட்டுப் போன அந்த சனீஸ்வரன் மீண்டும் வந்து பிடித்துக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முதல் இரண்டு வாரங்களும், வீட்டிற்கு தாமதமாக வருவதும், இரவு ஒன்பது மணிக்கு மேல் UK வாடிக்கையாளரோடு தொலைபேசியில் பேசுவதுமாக,எப்படா இந்த ப்ராஜெக்ட் முடியும் என்றாகி விட்டது. இரண்டு வாரங்களில் அந்த ப்ராஜெக்ட் வேலை முடிந்து, நான் மறுபடியும் நானாக மாறினேன். சரி, வலைப்பூவிற்குள் வரலாம் என்று நினைத்த பொழுது தான், இந்த நிறுவனத்தில் நான்கு வருடங்கள் குப்பை கொட்டியாகி விட்டதே, இதற்கு மேலும் இங்கே குப்பை கொட்டக்கூடாது,அதனால் வேறு வேலையை தேட ஆரம்பித்து விட வேண்டியது தான் என்று முடிவெடுத்து, தினமும் இரவு நான் வலைப்பூ உலகிற்குள் இருக்கும் நேரத்தை தியாகம் செய்து, வேறு வேலை தேடும் பணியில் ஈடு பட ஆரம்பித்தேன். அந்த பணியை நேற்றோடு கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு, மீண்டும் எனக்கு மிகவும் பிடித்த இந்த பணிக்கு திரும்பிவிட்டேன். அந்த ஆண்டவன் அருள் இருந்தால், கண்டிப்பாக இந்த வருடத்தில் வேறு வேலைக்கு மாறிவிடலாம். 

இவ்வளவையும் படிச்சுட்டு, “ஏண்டா உன் சோகக்கதை எல்லாம் சொல்றன்னு நீங்க கோபிச்சுக்கிறது புரியுது, அதனால கிறிஸ்துமஸ் சமயத்தில் நாங்க டிராக்டரில் ஊர்கோலம் போன கதையை உங்களுக்கு சொல்லி,உங்க கோபத்திலிருந்து தப்பிச்சுக்கிறேன். 

இங்கு பொதுவாக, நிறைய அலுவலகங்களில் டிசம்பர் மாதம் பதினைந்து தேதியிலிருந்து, ஜனவரி மாதம் முதல் வாரம் வரை கட்டாய விடுப்பு எடுக்கச் சொல்லுவார்கள். ஆங்கிலேயர்களுக்கு பண்டிகை கால விடுமுறையாக அது அமைந்து விடும். நமக்கோ தேவைப்படாத ஒரு விடுமுறையாகாத்தான் அது இருக்கும். ஆனால் எங்கள் அலுவகத்தில் அது மாதிரி இல்லை. எனக்கு வெறும் டிசம்பர் 25,26 மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் விடுமுறை. இந்த “fruit picking என்று சொல்லுகிறார்களே, அங்கு போய் நாமளும் அந்த “fruit pickingசெய்ய வேண்டும் என்று வீட்டு அம்மணிக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. நாம தான் மனைவியின் ஆசையை புரிந்து நடக்கும் கணவன் ஆச்சே, அதனால கூகிள் ஆண்டவரிடம் கேட்டு “ Canoelands Orchard அப்படிங்கிற ஒரு fruit pickingஇடத்தை கண்டுப்பிடிச்சேன். 




டிசம்பர் 26ஆம் தேதி காலையில,புளியோதரையும், தயிர் சாதத்தையும் கட்டிக்கிட்டு போனோம். இந்த பண்ணையில டிசம்பர் மாதத்துல nectrin மற்றும் plum பழ வகைகளை பறிக்கலாம்னு சொன்னாங்க. பொதுவா இந்த மாதிரி இடங்களில் நாம எவ்வளவு வேனாலும் பழங்களை பறிச்சு அங்கேயே சாப்பிடலாம், ஆனால் வீட்டிற்கு கொண்டு வருவதற்கு,கிலோவிற்கு இவ்வளவு என்று வைத்திருப்பார்கள், அந்த பணத்தை செலுத்திவிட்டு  நாம் கொண்டு செல்லலாம். இந்த இடத்திருக்கு உள்ளே போய் பழங்களை பறிப்பதற்கு பெரியவர்களுக்கு 5$, குழந்தைகளுக்கு 3$ (ஐந்து வயது குழந்தைகளுக்கு ஒன்றும் இல்லை) என்று செலுத்த வேண்டும்



(நுழைவுச் சீட்டுடன், பழங்களை பறித்துப் போட்டுக்கொள்வதற்கு பைகளை வாங்கும் இடம். கொசுறு செய்தி – இரண்டு பாட்டிகளும் சம்பந்திகளாம்!!!)




(கிறிஸ்துமஸ் சமயம் என்பதால் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்)

நாங்களும் பணத்தை செலுத்திவிட்டு ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு, அந்த பண்ணைக்குள் நடக்க ஆரம்பித்தோம். முதலில் nectrin பழ மரங்கள் தான் இருந்தது. அந்த மரங்களில் இருந்து ஒரு மூன்று நான்கு பழங்கள் தான் சாப்பிட்டு இருப்போம், அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஓவியாவும், இனியாவும் பழங்களை சாப்பிடுவதைக் காட்டிலும், அதனை பறித்து பையில் போடுவதில் தான் மும்முரமாக இருந்தார்கள். இன்னும் கொஞ்ச தூரம் நடந்த பிறகு plum மரங்கள் தென்பட்டது. Nectrin பழத்தையாவது மூன்று நான்கு என்று சாப்பிட முடிந்தது, இந்த plum பழத்தை கடிச்சா புளிப்புன்னா புளிப்பு அப்படி ஒரு புளிப்பு. ஆனால் உள்ளுக்குள்ள பார்த்த நல்லா இரத்த சிவப்பு நிறம். ரெண்டு மூணு பழம் மட்டும் சாப்பிட்டு, கொஞ்சம் பழங்களை மட்டும் பையில் போட்டுக்கொண்டு திரும்பி வந்து அந்த பழங்களை எடைபோட்டு வாங்கிக்கொண்டோம். பழங்கள் வாங்கியதால் அந்த பையையும் நம்மிடமே கொடுத்து விட்டார்கள்.



(காய்ச்சு தொங்கும் நெக்டரின் பழங்கள்)




(இரண்டு பக்கங்களிலும் காய்ச்சு தொங்கும் நெக்டரின் மற்றும் ப்ளம் பழங்கள்)




 (ப்ளம் பழங்களை மரத்திலிருந்து பறிக்கும்போது...)



(இரத்தக் கலரில் இருக்கும் ப்ளம் பழம். ஆனால் சுவை தான் இனிப்பாக இல்லாமல், ஒரே புளிப்பாக இருந்தது)

டிராக்டரில் அந்த பண்ணையை சுற்றிக்காட்டுவார்களாம்,அதுக்கு ஒருவருக்கு 3$ என்று சொன்னார்கள். எதுக்கு அதையும் விடுவானேன்ன்னு அந்த டிராக்டரில் ஏறி உட்கார்ந்தோம். அந்த டிராக்டர் ரைடுக்கும் நல்ல கூட்டம் தான். இந்த பண்ணையின் சுற்றளவு 25 ஏக்கர். அதில் ஏறக்குறைய 14000 மரங்கள் இருக்கிறதாம். இந்த 25 ஏக்கரையும் அந்த டிராக்டர்ல சுத்தி வந்தோம். அந்த அனுபவமும் ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது.


(டிராக்டரில் ஊர்கோலம் போவதற்கு தயாராக உட்கார்ந்திருக்கிறார்கள்)


(அந்த மஞ்ச சொக்காய் போட்டு, மஞ்ச தொப்பியை போட்டுக்கிட்டு இருப்பவர் தான் டிராக்டர் டிரைவர்).




(சாப்பாட்டு கட்டிக்கொண்டு வந்தால் இங்கே உட்கார்ந்து சாப்பாட்டுக்கடையைவிரித்து சாப்பிடலாம்)

அதுக்கப்புறம் வீட்டிலிருந்து கொண்டுவந்த புளியோதரையையும்,தயிர் சாதத்தையும் சாப்பிட்டு முடிச்சுட்டு கிளம்பலாம்ன்னு இருக்கும்போது, அங்க இருந்த இரண்டு பாட்டிகளில் ஒரு பாட்டி வந்து, உங்களுக்கு இன்றைய அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டாங்க. நாங்களும் ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்லி, இந்த இடத்தை யார் நிர்வாகம் செய்யுறாங்கன்னு கேட்டோம். அப்பத்தான் தெரிஞ்சுது,ஒரு குடும்பமா இந்த இடத்தை அவுங்க நிர்வாகம் செய்யுறாங்கன்னு. இந்த பாட்டி,இவுங்களோட கணவர், மகள்,அந்த மகளின் கணவர்,அவரோட அப்பா,அம்மான்னு ஒரே கூட்டுக்குடும்பமாக நிர்வாகம் செய்யுறாங்களாம். அந்த இன்னொரு பாட்டி, இவுங்க மகளோட மாமியாராம். டிராக்டர் ஓட்டி எங்களுக்கு பண்ணையை சுத்திக்காமிச்சவர் தான் இவுங்களோட மருமகனாம்.




(இரண்டு சம்பந்திகளில், மகளைப் பெற்றவர் இவர் தான்)


இப்படி இரண்டு சம்பந்திகளின் ஒற்றுமையைப் பார்த்தபோது, கூட்டுக்குடும்பத்துக்கு பேர் போன,நம்முடைய பாரம்பரியமும் இந்த மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

29 comments:

  1. வந்துட்டீயலா நான் நேற்றுகூட நினைத்தேன் அபுதாபி போஸீஸ் ஸ்டேஷனில் போய் ஒரு ஆளை காணவில்லைனு இண்டர் நேஷனல் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்ணஉ இருந்தேன் நல்லாகாலம் வந்துட்டீங்க...

    டிராக்கடருல போனதுக்கு மாட்டு வண்டியிலே போயிருக்கலாமே... பழம் புளிப்பா இருந்தால் சீனியைத்தொட்டு சாப்பிடலாம் இதுகூடவா தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல காலம் நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கலை. கொடுத்திருந்தா, உங்களைத்தான் பிடிச்சு விசாரிச்சிருப்பாங்க.
      அடுத்த முறை தேவகோட்டைக்கு வரும்போது சொல்றோம். நீங்களும் வந்து எங்களை மாட்டு வண்டியில,தேவகோட்டையை சுத்திக்காட்டுங்க பாஸ்.
      பழம் புளிச்சாலும், அதை எப்படியாவது சாப்பிடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்க.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. சுவையான அனுபவம்தான்! இங்கும் இது போன்ற ஒற்றுமையான சம்பந்திகள் அமைந்துவிட்டால் வரப்பிரசாதம்தான்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. சீக்கிரம் வேறு நல்ல, மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்க வாழ்த்துகள்.

    பயண அனுபவங்களை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  4. புளிப்புக்கு உப்பும் மிறகாய்ப்பொடியும்தான் காம்பினேஷன். பேசாம ஊறுகாய் போட்டுடுங்க.

    ReplyDelete
    Replies
    1. அட,இப்படி ஒரு சிந்தக்னை வராம, நாங்க வாங்கிக்கிட்டு வந்த பழங்களை ரொம்பவும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தோம்.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  5. புளியோதரையையும்,தயிர் சாதத்தையும் விடமுடியல போல

    ReplyDelete
    Replies
    1. புளியோதரையும் தயிர் சாதமும் நம்முடைய பாரம்பரிய உணவாச்சே. அடகி எப்படி விட முடியும்.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  6. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது நண்பரே
    அருமையான வேலை விரைவில் அமையட்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. படங்கள் ஒவ்வொன்றும் பிரமாதம்...

    விரைவில் வேலை கிடைக்கும்... அடுத்த பதிவுலேயே எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete
  8. //சனீஸ்வர பகவான் வேற உங்களை விட்டு போயிட்டாருன்னு சொன்னாங்களா, சரி//
    என்னங்க சனீஸ்வர பகவானை எனக்கு அனுப்பிச்சுவிட்டுட்டு அவர் உங்களை விட்டு போய்விட்டதா சொல்லுறீங்க.. சனி நம்ம ராசிக்கு வருவதற்கு முன்பே ரொம்ப கஷ்டம் இப்ப சனி பகவானே நம்ம பக்கம் வந்திருக்காரு பார்ப்போம் என்ன நடக்க போவதென்று... நம்ம ஊர்ல இருக்கிறவங்க நல்லதை கூப்பிட்டு சொல்லுறாங்களோ இல்லியோ இந்த மாதிரி செய்திகளை கூப்பிட்டு சொல்லுறாங்க. சனிபகவான் என் ராசிக்கு வந்துட்டதை என் மாமியார் கூப்பிட்டு சொல்லி பார்த்துங்க என்று சொன்னார்.. அவங்ககிட்ட உங்க மகளே கூட இருக்கும் போது நான் இதற்கெல்லாம் பயப்படுகிறவனா என்று சொல்லி மனதை தேற்றிக் கொண்டேன்

    ReplyDelete
  9. மனதுக்கு பிடித்த வேலை என்று ஒன்றுமில்லை எந்த வேலையும் சிறிதுகாலத்திற்கு பின்பு பிடிக்காமலே போகத்தான் செய்யும் அதனால் நாம்தான் வேலையை பிடித்து கொளவதாக ஆக்கி கொள்ளவேண்டும். நம் நண்பர்கள் அடிக்கடி வேலை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதால் நாமும் வேலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை சம்பளம் ஒழுங்காக வரும் வரை எல்லா வேலையும் நல்ல வேலைதான் மற்ற இந்தியர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம்


    இந்த ஆண்டு நல்ல ஆண்டாகவே இருக்கும் அதற்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்களும் உங்களுடன் வந்ததுபோல இருந்தது.

    ReplyDelete
  11. வாங்க சொக்கன் நண்பரே! எத்தனை நாளாகிவிட்டது...மீண்டும் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஆஹா என்ன அருமஒய்யான அனுபவம்.....இதே போன்று மேலை நாடுகளில் எல்லாம் உண்டு.தான்....இங்கு இந்தியாவில்? அது சரி சம்பந்திகள் சேர்ந்து இங்க நம்ம ஊர்ல பாக்க முடியுமா?!! உங்கள் கடைசி வார்த்தைகளை ஆமோதிக்கின்றோம்.....எவ்வளவு ஃப்ரெஷாக இருக்கும் இல்லையா பழங்கள்....சுவையான அனுபவம் தான்....

    ReplyDelete
  12. இப்படிப்பட்ட வித்தியாசமான சிந்தனை ஏன் நம் நாட்டவருக்கு வரவில்லை ?ஒருவேளை அனைத்து பழங்களையும் ஒரே நாளில் கபளீகரம் செய்து விடுவார்கள் என்ற பயமா ?மீண்டு (ம்) வந்ததற்கு வாழ்த்துகள்:)

    ReplyDelete
  13. ஆஅஹாஎவ்லொ வெயில் ..இன்னிக்கும் இங்கே கல் மழை இங்கேயும் பழங்கள் பறிக்கலாம் சம்மரில் மட்டும்.
    ஓவியா இனியா முகமே சொல்லுது நல்லா என்ஜாய் செய்துள்ளார்கள் ..

    ReplyDelete
  14. பழம் பறித்தல் ,டிராக்டர் பயணம் என நல்லதொரு அனுபவம் உங்களுக்கு. பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்காங்க. படங்கள் அருமை. வெயிலுக்கு நாங்க வெயிட்டிங்.

    ReplyDelete
  15. அழகான அனுபவம். குழந்தைகளுக்கும் இயற்கைக்குமான நல்லதொரு பாலம். உங்கள் மனைவிக்கு இப்படியொரு யோசனை சொன்னதற்காக என் சார்பில் பாராட்டுகளைத் தெரிவியுங்கள். விரைவில் நல்ல பணிமாற்றம் கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. புளிப்புச் சுவை மிகைந்திருந்தாலும் தெவிட்டாமல் தொட்டுச் சென்றமை அழகோ அழகு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. மகிழ்வான சுற்றுலா ..............வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வாங்கய்யா சொக்கன் அய்யா!
    மீண்டும் வரவேற்க வந்தோம் அய்யா!
    நல்ல வாய்ப்பு நாயகனை நாடி வர
    இறைவனை வேண்டி இன்று!
    நம்பிக்கையுடன் "நம்பி" (புதுவை வேலு)
    நின்றோம் அய்யா!

    "போவோமா ஊர்கோலம்..... (டிராக்டரில்)"
    ஊர் எல்லம் பூ வாசம்!

    சொக்கன் தோட்டத்து பதிவின் வாசம்
    வலைப் பூவுலகம் முழுவதும் வீசுகிறது.
    பதிவினைக் கண்டு களிப்பில் கரைந்து போனேன்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisi.blogspot.com

    ReplyDelete
  19. அட!!! எவ்ளோ நாள் ஆச்சு அண்ணனை பார்த்து.!! இப்போ குடும்ப சகிதம் பார்க்கிறது ரொம்ப சந்தோசம்.
    fruit picking நல்லா தான் இருக்கு:)

    பரவாலையே!!! அந்த கூட்டுக்குடும்பம் வாழ்க! வாழ்க!
    அண்ணாவின் குடும்பமும் தான்:))) இனியா, ஓவியா so க்யூட்:)

    ReplyDelete
  20. புளிப்பான ப்ளம்ஸ் பழங்களைப் பறித்தாலும் இனிப்பான அனுபவம் தானே! பதிவை இரசித்தேன்.

    ReplyDelete
  21. அருமையான அனுபவம்.... புதிய வாய்ப்புகள் பெற நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இன்றைய 06.03.2015 வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்துகள் நண்பரே...

    ReplyDelete
  23. குடும்பத்துடன் இனிய அனுபவம், பழங்கள் எவ்வளவு அருமையா தொங்குகிறது.
    புகைப்படங்கள் அழகாய் இருக்கிறது. விரைவில் மனம் போல் புதியது அமையட்டும், வாழ்த்துக்கள். இப்பதிவு என் டாஸ்போர்டில் வரவில்லை. நாரதர் வந்த பின் தான் இதைக்கண்டேன். நீண்ட நாள் ஆகிவிட்டது. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete