Saturday, December 20, 2014

ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்



இங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM)  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் தயாரித்த இந்த கலந்துரையாடலை எங்கள் பள்ளி மாணவிகள் வழங்கினார்கள்.

அதை நீங்களும் படிப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன்.


ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடம்


சொக்கன்: வணக்கம் மஹேஷ்வரன் பிரபா.
வணக்கம் நேயர்களே, ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கை பாடம்  என்ற இந்த நிகழ்ச்சி மூலமா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைபவர்கள் சொக்கன்,பாரதி, ஸ்ருதி,ஸ்வர்ணிகா,பிரியா,தீக்க்ஷா மற்றும் யாஷீலா.

சொக்கன்: நேயர்களே! உங்க எல்லோருக்கும் ஆத்திச்சூடியைப் பற்றி நல்லாத் தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு மறந்தும் போயிருக்கலாம். அப்படி மறந்து போயிருந்தவுங்களுக்காக, இங்க பாலர் மலர் ஹோல்ஸ்வோர்தி தமிழ் பள்ளி மாணவிகள், ஆத்திச்சூடி நமக்கு எப்படி எல்லாம் வாழ்க்கை பாடத்தை கற்றுத் தருதுன்னு கலந்துரையாட வந்திருக்காங்க. சரி, அவுங்க கலந்துரையாடுறதை கேக்காலாமா நேயர்களே.

பாரதி: நமக்கு எல்லாம் ஆத்திச்சூடியை எழுதினது ஔவ்வையாருன்னு தெரியும். அதுல மொத்தம் எத்தனை இருக்கும்னு தெரியுமா யாஷீலா?

யாஷீலா: தெரியும் பாரதி. மொத்தம் 13 தானே?

தீக்க்ஷா: 13 இல்லை, அதுக்கும் மேல நிறைய இருக்கு.

ஸ்வர்ணிகா: என்னது! 13 இல்லையா தீக்க்ஷா, நானும் 13 தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

பிரியா: மொத்தம் 108ன்னு நினைக்கிறேன் ஸ்வர்ணிகா.

ஸ்ருதி: சரியா சொன்ன பிரியா. நான் கூட முதல்ல 13 தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் தான் 108ன்னு தெரிஞ்சுது. ஏன் 
பாரதி, நாம 108ட்டையுமா பேச போறோம்!!!

பாரதி: இல்லை ஸ்ருதி, 108லேருந்து, முக்கியமான சிலதை எடுத்து பேசப்போறோம். சரி யாஷீலா, உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.

யாஷீலா: அறம் செய விரும்புஆறுவது சினம், இயல்வது கரவேல்.

ஸ்ருதி:இருங்க, இருங்க யாஷீலா, அர்த்தத்தோடு சொன்னாதான் எல்லோருக்கும் நல்லா புரியும்.

யாஷீலாசரி ஸ்ருதி. அறம் செய விரும்புன்னா, மத்தவங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படனும்.

பாரதி: அந்த ஆசையை நாம சின்ன வயசுலேருந்து வளர்த்துக்கணும்னு சொல்லியிருக்காங்க. அப்பத்தான் நாம பெரியவங்களான பிறகு, நம்மளை பார்த்து, அடுத்த தலைமுறையினரும் அந்த ஆசையை வளர்த்துப்பாங்க. நமக்கு அப்பா, அம்மா கொடுக்கிற பாக்கெட் மணிலேருந்துகொஞ்சம் எடுத்து, இயற்கை அழிவுகளால பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கலாம். இந்தியாவில,இலங்கைல படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவலாம்.  இது எல்லாம் ஒரு உதாரணம் தான், இந்த மாதிரி நிறைய வகையில மத்தவங்களுக்கு உதவி பண்ணலாம்.

தீக்க்ஷா: எங்க அப்பா கூட சொன்னாங்க பாரதி, தமிழ் நாட்டுல “தானே” புயலால பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பள்ளியில படிக்கிற மாணவர்கள் எல்லாம் உதவி செஞ்சாங்கன்னு.

பிரியா: “தர்மம் தலை காக்கும்னு” ஒரு பழமொழி கூட இருக்கு இல்ல!

ஸ்ருதி: ஆமாம், பிரியா, யாராவது கஷ்டபடும்போது, நாம அவுங்களுக்கு உதவி செஞ்சா, நாம கஷ்டத்துல இருக்கும்போது,நமக்கு யாராவது உதவி செய்வாங்கஅந்தக் காலத்துல தமிழ் படத்துல, புரட்சிக் தலைவர் எம்‌ஜி‌ஆர் கூட தர்மம் தலைக்காக்கும்னு பாடியிருக்காங்களே!. 

ஸ்வர்ணிகா ஆறுவது சினம். அப்படின்னா, கோபத்தை நாம தனிக்கனும். 

பிரியா: புரியலையே, ஸ்வர்ணிகா, அப்படின்னா, கோபமே படக்கூடாதா?

ஸ்வர்ணிகாஅப்படி இல்லை பிரியா, கோபப் பட்டாலும், நமக்கு கோபத்தை அடக்க தெரிஞ்சிருக்கனும். அதாவது, இந்தியாவில டீக் கடைல பார்த்தீங்கன்னா, சூடனா காப்பியை இல்லை டீயை தூக்கி ஆத்துவாங்க. அது மாதிரி, நாம கோபத்தை ஆத்தனும்னு சொல்லியிருக்காங்க.

தீக்க்ஷா: அடுத்து, “இயல்வது கரவேல்”. இதுவும் மத்தவங்களுக்கு உதவுறது  பத்தி தான். அதாவது, நம்மலாள மத்தவங்களுக்கு உதவ முடியும்னா, கண்டிப்பா உதவனும்.

ஸ்ருதி: ஆமா தீக்க்ஷா, தயங்காம நம்மலாள முடிஞ்சதை அடுத்தவங்களுக்கு தேவையா இருக்கும்போது உதவனும்.

யாஷீலா: “ஈவது விலக்கேல்”. இதுக்கு என்ன அர்த்தம் பாரதி.

பாரதி: யாஷீலா, இதுக்கு முன்னாடி நம்ம பேசுனது எல்லாம், நாம அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு. ஆனா இந்த ஆத்திச்சூடி வந்து, நம்ம நண்பர்கள் யாராவது, அடுத்தவங்களுக்கு உதவி செய்யும்போது, அதை தடுக்க கூடாது.

பிரியா: அப்படி எல்லாமா தடுப்பாங்க பாரதி?

பாரதி: ஏன் இல்ல பிரியா, நமக்கு வேண்டாதவங்களுக்கு, நம்ம நண்பர்கள் உதவி பண்ணும்போது, அவுங்களுக்கு எதுக்கு உதவி பண்றீங்கன்னு கேப்போம் இல்லையா? அது மாதிரி செய்ய கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.

ஸ்வர்ணிகா: “ஊக்கமது கைவிடேல்”, அப்படின்னா என்ன அர்த்தம் ஸ்ருதி.

ஸ்ருதி: நாம ஏதாவது ஒரு செயலில் ஈடுபடும்போது, தடங்கல் ஏற்பட்டா, அதைப் பார்த்து பயந்து நம்மளோட தைரியத்தை இழக்கக்கூடாது 
ஸ்வர்ணிகா.

பிரியா: தமிழ் நாட்டுல கல்லூரியில போயி சேர்ந்து, பாடங்களை படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குனு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம். அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பாரதி: ஆமா, நான் கூட அதைப் பற்றி  கேள்விப்பட்டேன் பிரியா. இந்த ஆத்திச்சூடியை அவுங்க வாழ்க்கையில பின்பற்றி இருந்தாங்கன்னா, அந்த சோகமான முடிவுக்கு போயிருக்க வேண்டாம். அவுங்க 12ஆம் வகுப்பு வரைக்கும் தமிழிலே எல்லாப் பாடங்களையும் படிச்சதுனால, கல்லூரியில எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில படிக்க கஷ்டமா இருந்திருக்கு. ஆனா அதையே ஒரு சவாலா எடுத்து, படிச்கிருக்கலாம். புதுசா எந்த ஒரு வேலையை செய்யும்போது, தடங்கல் வரத்தான் செய்யும்.அந்த தடங்கலை மீறி, நாம அதை வெற்றிக் கரமா செஞ்சு முடிக்கனும்னு சொல்லியிருக்காங்க.

பிரியா: அடுத்து, “எண் எழுத்து இகழேல். இதுக்கு கணிதத்தையும், இலக்கியத்தையும் இகழ்ந்து ஒதுக்க கூடாதுன்னு அர்த்தம்.

தீக்க்ஷா: “ஏற்பது இகழ்ச்சினா, மத்தவங்ககிட்ட போயி யாசிப்பது ஒரு இழிவான செயலா சொல்றாங்க.

ஸ்ருதி: நாம வரவுக்கு தகுந்த செலவு தான் செய்யனும்னு, இந்த ஆத்திச்சூடில மறைமுகமா சொல்லியிருக்கு. வரவுக்கு மீறி நாம செலவு செய்யும்போது தான், பிறரிடம் போயி யாசிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும்.

யாஷீலா: “ஐயம் இட்டு உண்”, இதுக்கு பிச்சை கேட்பவர்களுக்கு முதலில் சாப்பாடு கொடுத்துட்டு தான் நாம சாப்பிடனும்னு சொல்றாங்க.  

ஸ்வர்ணிகா: ஒப்புரவு ஒழுகு”, இதுக்கு என்ன அர்த்தம் பாரதி?

பாரதி:அதாவது ஸ்வர்ணிகா, உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துக் கொள்ள வேண்டும்னு அர்த்தம். சுருக்கமா சொல்லனும்னா, சமயத்துக்கு தகுந்த மாதிரி, நாம நடந்துக்கனும். இதுக்கு ஊரோடு ஒத்து வாழ் அப்படின்னு இன்னொரு அர்த்தமும் இருக்கு. அதாவது நாம் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறோம். இந்த ஊர் மக்களுடன் நாம் ஒத்து வாழவேண்டும். இதைத்தான்இங்கு ஆங்கிலத்தில் "migrant assimilation" என்கிறார்களோ?'  சரி நாம ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு, நிகழ்ச்சியை தொடருவோமா!!!

விளம்பர இடைவேளை

ஸ்ருதி: அடுத்து, “ஓதுவது ஒழியேல் அப்படின்னா, நாம எப்பவுமே, படிப்பதை நிறுத்தக்கூடாது. புத்தகம் படிக்கும்போது தான், நம்மளோட உலக அறிவு நல்லா வளரும். ஆனா பாருங்க இந்த காலத்துல முக்கால் வாசிப் பேரு, TV முன்னாடியோ, கம்ப்யூட்டர் முன்னாடியோ தான் ரொம்ப நேரத்தை செலவிடுறோம்.

ப்ரியா: :ஒளவியம் பேசேல் அப்படின்னா, பொறாமை குணத்தோடு நாம பேசக்கூடாது. அதாவது, மனசுகுள்ள பொறாமை குணத்தை வச்சுக்கிட்டு, வெளியில ரொம்ப நல்லவங்க மாதிரி நடிக்கக் கூடாது.

பாரதி: “அஃகஞ் சுருக்கேல்”, இந்த ஆத்திச்சூடியை வந்து மளிகை சாமான் கடை வச்சிருக்கிறவுங்க ரொம்பவும் பின்பற்றனும். அதாவது, தானியங்களை எல்லாம் எடை அளவு குறைத்து விற்க கூடாது. ஆனா பாருங்க, இப்பவும் தமிழ் நாட்டில, ரேஷன் கடைல எல்லாம் சரியான அளவுல நமக்கு சாமான் தரமாட்டாங்களாம்.

தீக்க்ஷா: “சனி நீராடு அப்படின்னா, சனிக்கிழமை மட்டும் குளிக்க சொல்றாங்களா ஸ்ருதி?

ஸ்ருதி: அப்படியில்லை தீக்க்ஷா, நம்ம உடம்பு எப்பவுமே சூடா இருக்கும். அந்தச் சூட்டை தனிக்கனும்னா, வாரத்துல ஒரு நாளாவது, எண்ணைத் தேச்சு குளிக்கனும். அதுக்கு தான் ஆத்திச்சூடியில, ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணைத் தேச்சு குளிக்க சொல்லியிருக்கு.

ஸ்வர்ணிகா: “தந்தை தாய் பேண்”, இதுக்கு நாம நம்ம பெற்றோர்களை, அவுங்க வயசானதுக்கு அப்புறம், அவுங்களை ஆதரிக்கனும்னு சொல்றாங்க.

பாரதி: சரியா சொன்ன ஸ்வர்ணிகா, இந்த ஆத்திச்சூடியை மட்டும் நாம பின்பற்றோம்னா, எங்கேயுமே முதியோர் இல்லங்கள் இருக்கவே இருக்காது. பெற்றோர்கள் வந்து, அவுங்க கடமையை ஒழுங்கா செய்யுறாங்க, அதாவது பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வச்சு ஆளாக்குறாங்க. ஆனா சில பிள்ளைங்க தான், பெரியவங்களானப் பிறகு, பெற்றவர்களை கவனிக்காம, முதியோர் இல்லத்துல கொண்டுப் போயி விட்டுடுறாங்க.

யாஷீலா: “நன்றி மறவேல்”, நாம என்னைக்குமே, நமக்கு உதவி செஞ்சவங்களை மறக்கக் கூடாது.

ப்ரியாஅதேமாதிரி குணமது கைவிடேல் அப்படின்னா, எப்போதும் நாம நல்ல பண்புகளோடு வாழ வேண்டும்.

ஸ்ருதி ::கூடிப் பிரியேல்”, இந்த ஆத்திச்சூடி வந்துநல்ல பண்புடையவர்களோடு, நாம நட்புப் பாராட்டி, அவர்களை விட்டுப் பிரியக் கூடாது. அடுத்தது பாத்திங்கான்னா , “கெடுப்பது ஒழி” அப்படின்னு ஒரு ஆத்திச்சூடி, இதுக்கு என்ன அர்த்தம்னா, யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. நாம இதுக்கு முன்னாடி சொன்ன :”குணமது கைவிடேல்”, “கூடிப் பிரியேல்”, அத்த்ச்சூடிகளை பின்பற்றினோம்னா, நாம யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்.

தீக்க்ஷா: சித்திரம் பேசேல்அப்படின்னா என்ன பாரதி?

பாரதி: அதாவது தீக்க்ஷா, பொய்யை வந்து ரொம்ப அழகா, உண்மை மாதிரியே பேசக்கூடாது. சில பேரு பேசும்போது, அவுங்க உண்மையை சொல்றாங்களா, இல்ல போயி பேசுறாங்களான்னு கண்டுப் பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு அவுங்க பொய்யை, உண்மை மாதிரி பேசுவாங்க. இந்த மாதிரி பேசக் கூடாதுன்னு சொல்றாங்க.

ஸ்வர்ணிகா: : செய்வன திருந்தச் செய்”, அதாவது, எந்த ஒரு காரியத்தை நாம செஞ்சாலும், திருத்தமா செய்யனும். ஏனோ தானோன்னு செய்யக் கூடாது.

ஸ்ருதி: இந்த நிகழ்ச்சி மூலமா, ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கு, அது என்னன்னு யாராவது சொல்ல முடியுமா?

பாரதி: நான் சொல்றேன் ஸ்ருதி, எப்பவுமே, மத்தவங்க தான் நமக்கு அறிவுரை வழங்கி இருக்காங்க. ஆனா, இந்த நிகழ்ச்சி மூலமா, நாம மத்தவுங்களுக்கு ஆத்திச்சூடி, எப்படி எல்லாம் வாழ்க்கைப் பாடத்தை கத்துக் கொடுக்குதுன்னு சொல்லியிருக்கிறோம். அந்த வகைல நாம மத்தவங்களுக்கு அறிவுறைகளை எல்லாம் வழங்கி இருக்கோம்னு சொல்லலாம்.

சொக்கன்: சரியா சொன்னிங்க பாரதி. சரி, நீங்களே சொன்னீங்க, நேயர்களுக்கு அறிவுரைகளை எல்லாம் சொன்னோம்னு, கண்டிப்பா நேயர்களுக்கு இது எல்லாம் தெரிஞ்சிருக்கும். நாம மீண்டும் ஒரு தடவை அவுங்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கோம் அவ்வளவுதான். என்ன நேயர்களே நான் சொல்றது சரி தானே. இது வரை இந்த நிகழ்ச்சியை பொறுமையாக கேட்ட உங்கள் அனைவருக்கும், வாய்ப்பு வழங்கிய டமி முழக்கம் வானொலி நிர்வாகத்தினருக்கும் எங்களது நன்றி கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுவது சொக்கன். 

பின் குறிப்பு: அடுத்த பதிவு, "இப்படியெல்லாம் கூடவா நம்மளை ஏமாற்றி பணம் பறிக்க முடியும்!" ஒரு விழிப்புணர்வு பதிவு விரைவில்....  

22 comments:

  1. வானொலியில் ஒலிபரப்பாகிய...ஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம் ....நிகழ்ச்சியை...கேட்டு..இன்புற்றோம். சிறப்பாக இருந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  2. அய்யா வணக்கம். தமிழகமே மறந்துபோன ஒளவையின் 'ஆத்திச்சூடியை,ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு கற்பிக்கும் தங்களை எப்படிப் பாராட்டுவது..?!
    .......தமிழ்போல் வாழ்க!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. அய்யா,
    வணக்கம்.
    தீக்ஷா, பாரதி, பிரியா, யாஷீலா,ஸ்வர்ணிகா, இவர்களுடன் இருந்து நாங்களும் மாணவராகி உங்கள் பாடத்தைக் கேட்டோம்.
    இப்படித் தமிழ் சொல்லிக் கொடுத்தால் யார்தான் விரும்ப மாட்டார்கள்?

    அருமையான முயற்சி அய்யா இது.

    இரண்டு கருத்துகள் மட்டும்,

    “ஈவது விளக்கேல்”. என்பது ஈவது விலக்கேல் என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    சனி நீராடு என்பதற்கு சனித்த நீர் அதாவது குளிர்ந்த நீரில் குளித்தல் என்பது பொருள் என்று நினைக்கிறேன்.

    ஆனால் உங்கள் ஊரில் இதைச் சொல்வது உயிரோடு விளையாடுவது போல் ஆகிவிடும் இல்லையா..? ஹ ஹ ஹா

    ஆசானே,

    உங்களைத் தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆசானே- அந்த எழுத்துப்பிழையை மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

      "//சனி நீராடு என்பதற்கு சனித்த நீர் அதாவது குளிர்ந்த நீரில் குளித்தல் என்பது பொருள்//" - இது தான் சரி. ஆனால் தாங்களே சொல்லியிருப்பது போல், இங்கு வெயில் காலத்தில் கூட குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது மிகவும் கடினம். அதனால் தான் எண்ணெய் குளியலைப் பற்றி சொன்னேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசானே.

      Delete
  4. இந்த காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக இங்கு தொலைக்கப்பட்டிருக்கும் பொருண்மைகளில் இதுவும் ஒன்று. இவ்வாறான நீதிக்கதைகளை பள்ளியில் தொடர்ந்து நடத்தப்படவேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு மனப்பக்குவத்தை இவை ஏற்படுத்தும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் தயாரித்ததாகக் கூறப்படும் இந்த கலந்துரையாடல் எக்காலத்திற்கும் பொருந்தும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. ஆரம்பப் பள்ளியில் படித்த ஆத்திச்சூடியை திரும்பவும் படிக்க உதவியமைக்கு நன்றி. தாங்கள் ஆற்றும் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அழகான விளக்கம்... அருமையான விளக்கம்...

    உரையாடல் பாணியில் எழுதுவது என்பது சிறிது சிரமம் தான்... அதை சிறப்பாக செய்து உள்ளீர்கள்...

    கவனிக்க : இந்த பதிவு பலமுறை திருத்தி வெளியிட்டீர்களா...? ஏனென்றால் பலமுறை reader-ல் வந்துள்ளது...

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவை முதல் முறை வெளியிட்டபொழுது, என்னுடைய டாஷ்போர்டில் தெரியவில்லை. அதனால் இதனை மீண்டும் மீண்டும் வெளியிட்டு ஒரு வழியாக என்னுடைய டாஷ்போர்டில் தெரிந்தது. அதனால் தான் தங்களின் ரேயடர்-ல்பலமுறை வந்திருக்கு.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

      Delete
  7. அருமையான உரையாடல்....

    பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete
  8. இன்று ஜோக்காளியிலும் fm தான் ,ஆனால் என்னவர் சூடு போட்டுக் கொண்டார் ,நீங்கள் ஆத்திச் சூடியை புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க !

    ReplyDelete
    Replies
    1. உங்களவர் ஒரு வீட்டிற்கு இரு வீடு வைத்துக்கொண்டால் சூடு போட்டுக்கொள்ளாமல் என்ன செய்வாராம்?

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி

      Delete
  9. நல்ல முயற்சி இது. அருகாமை உயரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பது போல உள்ளூரில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருப்பவர்களால்தான் இதுபோன்ற அருமைகளை உணர(வைக்க) முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  10. மிகவும் நல்ல முயற்சி. நம் தமிழ் நாடு மறந்ததை எல்லாம் உங்களைப் போன்று வெளியூரில் வசிப்பவர்கள் அருமையாகத் தமிழை வளர்க்கின்றீர்கள். அதுவும் அடுத்த தலைமுறையினருக்கு...பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் நண்பரெ!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோஸ்

      Delete
  11. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்தி விட்டு கருத்திடுங்கள் சகோ

    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html

    ReplyDelete
  12. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
    படித்திட வேண்டுகிறேன்.)

    ReplyDelete
  13. நல்ல முயற்சி. ( ஆத்திசூடி என்று இருக்கவேண்டும். )

    ReplyDelete