Friday, April 18, 2014

சிட்னியில் - சைவ நெறி மாநாடு - 2014

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,






சிட்னியில் சைவ மன்றமும், உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து ஆகஸ்ட் மாதம் 29,30,31 தேதிகளில் "சிட்னி முருகன் சைவநெறி மாநாடு - 2014" என்ற மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்   - "சைவ ஆகமங்கள் மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம்" ஆகும். இந்த மாநாட்டில் ஒரு முக்கிய சிறப்பு அம்சமே, இளைஞர்களின் பங்களிப்போடு நடத்தப்படுவது தான். மாநாட்டுக் கட்டுரைகளுக்கான தலைப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் . கட்டுரைகளின் தலைப்பு வெளிவந்தவுடன், தெரிவிக்கிறேன், தமிழிலும், சைவத்திலும் ஆர்வமுள்ள நண்பர்கள் கட்டுரைகளை படைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் கட்டுரையை எழுதி அனுப்பலாம். 


சிட்னி சைவ மன்றம்,  சைவசமய வகுப்புகளையும், பண்ணிசை வகுப்புகளையும் சிட்னி முருகன் கோவிலிலும், ஹோம்புஷ் பள்ளியிலும் என இரண்டு இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்  நடத்துகிறது. மேலும் வருடாவருடம் சைவ மன்றம்,சைவ சமய அறிவுத்திறன் போட்டிகளை குழந்தைகளுக்கு நடத்துகிறது.  


சிட்னியில் "உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியா" மாதந்தோரும் திருமுறை முற்றோதலை நடத்தி வருகிறது. இதுவரை வெற்றிக்கரமாக 94 திருமுறை முற்றோதலை  நடத்தியுள்ளது.  


ஆஸ்திரேலிய நண்பர்களே, ஆகஸ்ட் 29,30,31 (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை) தேதிகளை உங்களுடைய நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு, மறக்காமல் இந்த சைவநெறி மாநாட்டில் கலந்து கொண்டு, நம்முடைய அடுத்த தலைமுறையினரும் சைவ சமயத்தை வளர்ப்பதற்கு  உதவி புரியுங்கள். 

12 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்.

      Delete
  2. தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .வாழ்த்துக்கள் மென்மேலும்
    ஆக்கங்கள் தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

      Delete
  3. கட்டுரை முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி டிடி

      Delete
  4. நல்ல விடயம் சகோ வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

      Delete
  5. நல்ல விசயம் தோழர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

      Delete
  6. மிகவும் அருமையான விஷயம்! மாநாடு நல்லபடி நடந்து சைவம் தழைக்க இறைவனை வேண்டுகிறேன்! தகவலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் நன்றி சுரேஷ்,

      Delete