Monday, February 20, 2012

சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான்

ரொம்ப பேருக்கு ஒரு சந்தேகம், நான் ஏன் சொக்கன்னு பேரை மாத்திக்கிட்டேன்னு .  இப்பத்தான் கதையெல்லாம் எழுத ஆரம்பிசிருக்கீங்க, அதுக்குள்ள புனைப் பெயரான்னு நீங்க கேக்கிறது தெரியுது. புனைப் பெயர் எல்லாம் கிடையாதுங்க. என் அப்பா வழி கொள்ளுத் தாத்தாவோட பேரு சொக்கலிங்கம். அவர் அந்த காலத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டு புரிந்தவர். அதனாலேயே அவரை "திரு. சொக்கலிங்க ஐய்யான்னு" சைவ உலகத்துல கூப்பிட்டாங்க. தன் வாழ்நாளில் 108 நூல்களை படைத்து "சைவ சித்தாந்த வித்தகரா" வாழ்ந்தவர் .

 எனக்கு, சிட்னியில் கிடைக்கப் பெற்ற நல்ல தமிழ் நண்பர்கள் மூலம் ஏதோ இராமர் இலங்கை செல்ல  பாலம் கட்ட உதவிய அனிலைப் போல , புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழ் சமுதாயத்துக்கு மிகவும் சொற்ப அளவில் பங்களிப்பை அளிக்கிறேன்னு ஒரு மனத்திருப்தி.  இந்த மனத்திருப்தியோட நாம வாழ்ந்து விடக் கூடாது, அந்த பங்களிப்பை இன்னும் அதிகம் ஆக்கனும். அதுக்கு நம்ம கொள்ளுத்தாத்தாவோட பேரை வச்சுக்கிட்டா,அந்த பங்களிப்பு இன்னும் அதிகம் ஆகும்னு நினைச்சு தான் அந்த பேரை நான் வச்சுக்கிட்டேன். ஒவ்வொரு தடவையும் அந்த பேரை படிக்கும் போதும்,  மற்ற நெருங்கிய நண்பர்கள் கூப்பிடும் போதும், தமிழ் உலகுக்கு இன்னும் நிறைய செய்யணும்னு ஒரு உத்வேகம் வருது. அந்த பேர் எனக்கு ஒரு உற்சாக மருந்தா அமைஞ்சிருக்கு .
இது தாங்க சம்பந்தம் சொக்கனாக மாறின கதை.
பின் குறிப்பு: எனக்கும் என் பேருக்கும் ஒரு பெரிய ராசிங்க. நான் பிறந்தப்ப, எனக்கு வச்ச பெயர், என் தாத்தாவின் பேரான - திருநாவுக்கரசு. 6 வயதுக்கு பிறகு, என் தந்தையின் வேண்டுகோளின் படி, என் பெரியப்பா எனக்கு சம்பந்தம்னு பேரை மாத்துனாங்க. ரொம்ப வருஷம் அந்த பேரே நிலைச்சிருந்தது. நான் UKவுக்கு போன போது , என் பெயரை அங்கு இருந்த துரை மாருங்க எல்லாம் ரொம்பவே கொலை பண்ணுனதுனால,நானேஅவுங்க சுலபமா என்னை கூப்பிடுறதுக்கு,"SAM"னு மாத்திக்கிட்டேன். இப்போ அந்த "SAM" தான் அலுவலகத்தில் எனக்கான  பேர்.  என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில எனக்கு எந்த பேரு நிலைக்கப் போகுதுன்னு எனக்கே தெரியலை.

7 comments:

  1. நண்பரே,

    கடந்த பல வருடங்களாக ‘என். சொக்கன்’ என்ற பெயரில் நான் கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், வலைப்பதிவுகள் எழுதிவருகிறேன். நீங்களும் இணையத்தில் இதே பெயரைப் பயன்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று நினைக்கிறேன். இயன்றால் உங்கள் புனைபெயரை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன். நன்றிகள்.

    என்றும் அன்புடன்,
    என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      நான் என்னுடைய வலைப்பூவில், அந்த புனைப் பெயருக்கான காரணத்தை சொல்லி இருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல், இங்கு சிட்னியில் அந்த புனைப் பெயரில் தான் பத்திரிகை, வானொலி, நாடகம் போன்றவற்றில் எழுதியும், வாசித்தும் வருகிறேன். அதனால் அந்த புனைப் பெயரை மாற்றிக் கொள்வது என்பது சற்று முடியாத காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  2. அன்பு சொக்கன்,

    சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்!

    “துரைமாருங்க” என்கிற வார்த்தை வேண்டாமே!!! அது நாம் அடிமைப்பட்டுக்கிடந்தபோது நம்மீது திணிக்கப்பட்ட வார்த்தை...

    அன்புடன்,
    சுந்தர்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சுந்தர்.
      தங்கள் விருப்படியே, இனிவரும் பதிவுகளில் "துரைமாருங்க" வராம பார்த்துக் கொள்கிறேன்.

      Delete
  3. // என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில எனக்கு எந்த பேரு நிலைக்கப் போகுதுன்னு எனக்கே தெரியலை.//

    உங்களை எப்படிக் கூப்பிட்டாலும் பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர்தான் கடைசி வரை... இடையில் மாற்றாத பட்சத்தில் அதுவே நிலைத்திருக்கும்.... சரிதானே?

    ReplyDelete
  4. சரியாக சொன்னீர்கள். பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் தான் என்றைக்குமே நிலைக்கக்கூடியது.
    என் சந்தேகத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு, "பிடியுங்கள் 1000 பொற்காசுகளை!!!!!!!!!!!!!!!!!" என்று சொல்லத்தான் ஆசை. ஆனால்...... ?

    ReplyDelete
  5. சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அடிக்கடி பெயரை மாற்றிக்கொள்ளாதீர்கள் ... "சொக்கலிங்க சம்பந்த திருநாவுக்கரசு" என்று நீட்டி வைத்துகொள்ளுங்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete